< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மனு
|10 Jan 2023 1:03 AM IST
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் தலைமையில், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் சென்னையில் வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 18-வது ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் பாரா தடகள போட்டிகள் சாம்பியன்ஷீப் நடைபெறவுள்ளது. போட்டிகளில் விளையாட பெரம்பலூா் மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சென்று வருவதற்கும், சீருடை, ஷூ, விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.