< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
31 Jan 2023 11:54 PM IST

மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பரிமளம் தலைமை தாங்கினார். உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை உள்ளிட்ட தாலுகா பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். முகாமில் மொத்தம் 31 மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்தில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக 4 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டது. முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்