ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அஞ்சலி
|இயக்குனர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 7.15 மணி அளவில், 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதன்படி பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஏற்கனவே அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது வெற்றிமாறன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.