< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் தினமும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தினமும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

தினத்தந்தி
|
29 Sept 2023 9:01 PM IST

தினமும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மறுஉத்தரவு வரும் வரை தினமும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்பு கொண்ட இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். சொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்