ராமநாதபுரம்
கமுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
|கமுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு செய்தார்.
கமுதி பேரூராட்சியில் ரூ.2.87 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.59.40 லட்சம் செலவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கமுதி கண்ணார்பட்டி ஊருணி ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்தி, பக்கவாட்டில் கல் பதிக்கும் பணிகள் மற்றும் சிங்கம் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், ரூ.1.80 கோடி மதிப்பிலான வாரச்சந்தை கடை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மண்டல உதவி இயக்குனர் ராஜா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பேரூராட்சி துணைத்தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் ரா.இளவரசி, சிவகங்கை மண்டல அலுவலக தலைமை எழுத்தர் மங்களேஸ்வரன், கமுதி பேரூராட்சி இளநிலை பொறியாளர் ராஜஜெயபூபாலன், வரித்தண்டலர் பாஸ்கரபூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.