< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
|10 Aug 2022 5:03 PM IST
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பட்டுக்குடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் நேரில் பார்வையிட்டார். பின்னர் 'மக்களை தேடி மருத்துவம்' முகாமை ஆய்வு செய்த பிறகு, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் தொடங்கி ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை பார்வையிட்டு வருவதாகவும், இந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க தேவையான மருந்து இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.