< Back
மாநில செய்திகள்
முதுகுளத்தூரில் வறட்சி பகுதிகளை வேளாண் இயக்குனர் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதுகுளத்தூரில் வறட்சி பகுதிகளை வேளாண் இயக்குனர் ஆய்வு

தினத்தந்தி
|
7 Feb 2023 12:25 AM IST

முதுகுளத்தூரில் வறட்சி பகுதிகளை வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் நடப்பாண்டில் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சரிவர பெய்யவில்லை. இதனால் கண்மாய்கள் வறண்டு விட்டன. போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்களிலும் வளர்ச்சி இல்லை. தொடர்ந்து வறட்சி காரணமாக நெற்பயிர் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் கோரிக்கைக்கு ஏற்ப வறட்சி பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் கடலாடி வட்டாரத்தில் ஏனாதி, மற்றும் முதுகுளத்தூர் வட்டாரத்தில் தேரிருவேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயலில் ஆய்வு மேற்கொண்டு அங்கு கூடியிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்வதாக அறிவித்தனர். ஆய்வின்போது சப்-கலெக்டர் நாராயண சர்மா, ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனிஷ்கோடி, செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்