ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு
|ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார்.
மதுரை,
ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை நேற்று தெரியவில்லை. எனவே நாளை (வியாழக்கிழமை) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரம்ஜான் பண்டிகை) நாளை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகை செய்தார். இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரின் வீடு உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.