< Back
மாநில செய்திகள்
சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கு இன்று நேரடி டிக்கெட் முன்பதிவு - நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்
மாநில செய்திகள்

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கு இன்று நேரடி டிக்கெட் முன்பதிவு - நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்

தினத்தந்தி
|
18 March 2023 8:08 AM IST

நள்ளிரவு முதலே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், ரூ.139 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கூடுதலாக 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த மைதானத்தில் வரும் 22-ந்தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான நேரடி டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்து வரும் நிலையில், முன்கூட்டியே டிக்கெட் விநியோகத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்