< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
4 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல்செயல்பாட்டிற்கு வருகிறது
|22 July 2022 12:16 AM IST
4 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2021-22 முன்பட்ட குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதற்கட்டமாக உடையார்பாளையம் தாலுகாவில் ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி, பிள்ளைப்பாளையம் ஆகிய 4 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளதால், இதனை அருகே உள்ள விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.