கள்ளக்குறிச்சி
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
|ஏர்வாய்பட்டிணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். சின்னசேலம் ஒன்றியக் குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். நெல்கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர் குமார் வரவேற்றார். இதில் ஏர்வாய்பட்டிணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, அய்யாவு, கிளை செயலாளர் அன்பழகன், வடக்கனந்தல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தண்டபாணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜுலு, நகர செயலாளர் ஜெயவேல், வார்டு கவுன்சிலர் தசரதன் மற்றும் நிர்வாகி சேட்டு என்கிற பழனியப்பன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.