< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

தினத்தந்தி
|
9 Feb 2023 12:15 AM IST

எடக்குடி வடபாதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

திருவெண்காடு:

சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசு அனுமதி அளித்தது. நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்