< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

தினத்தந்தி
|
30 Dec 2022 4:41 PM IST

நாகப்பாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

செங்கம்

செங்கம் அருகே உள்ள கலபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் நாகப்பாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நாகப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்