< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஏப்ரல் 1-ந் தேதி முதல் மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை
|30 March 2023 10:32 AM IST
வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை வாரந்தோறும் தொடங்குகிறது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள ரங்கூன்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்க மியான்மர் நாட்டு விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் விமான சேவை தொடங்குகிறது
வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் இந்த விமான சேவை நடக்க இருக்கிறது. இந்த விமானம் ரங்கூனில் இருந்து சென்னைக்கு வருகை புறப்பாடு நேரம் எப்போது என்ற கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.