< Back
மாநில செய்திகள்
திண்டிவனம் அரசு கல்லூரியில் விஷம் குடித்து மாணவர் தற்கொலை முயற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனம் அரசு கல்லூரியில் விஷம் குடித்து மாணவர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளி குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 19). இவர் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கியிருந்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று கல்லூரி வளாகத்தில் தான் வாங்கி வைத்திருந்த குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்ததாக தெரிகிறது. இதை பார்த்த சக மாணவர்கள் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கல்லூரியில் மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்