< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: காதல் விவகாரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்
மாநில செய்திகள்

திண்டுக்கல்: காதல் விவகாரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

தினத்தந்தி
|
8 Sept 2024 9:03 PM IST

காதல் விவகாரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற செல்வம், அங்கு தனது காதலியை அழைத்து பேசியுள்ளார். அப்போது, செல்வத்துக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி காதலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த செல்வம், உறவினரின் வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் காதலியை சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிறிது நேரத்தில் செல்வமும் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் சிறுமியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்