< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி
|19 Nov 2022 4:19 PM IST
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்த போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வழக்கமான பரிசோதனைக்காகவே திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் திங்கட்கிழமை அவர் திண்டுக்கல்லில் இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.