< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல்: கோழியை கடித்த நாயின் உரிமையாளர் குத்திக் கொலை - வாலிபர் வெறிச்செயல்...!
|8 Sept 2022 2:01 PM IST
நத்தம் அருகே கோழியை நாய் கடித்தால் ஏற்பட்ட தகராறி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (26). இவர் நாய் வளர்த்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்தவர் முத்தன்(38).இவரது கோழியை விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சராமரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.