< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நீக்கம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
|27 March 2024 10:37 PM IST
திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜோதிமுத்து, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க. போட்டியிடுகிறது. இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ' திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜோதிமுத்து, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க.வின் புதிய செயலாளராக வைரமுத்து நியமிக்கப்படுகிறார். அவருக்கு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.