< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: மது போதையில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

திண்டுக்கல்: மது போதையில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
22 July 2022 10:01 AM IST

வேடசந்தூர் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ரெட்டியபட்டி லக்கான் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 39). இவர் வடமதுரையில் டைலர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கருப்புசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது கருப்புசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்படுட்டுள்ளது. அப்போது குடி போதையில் இருந்த கருப்புசாமி அவரது மனைவியை கத்திரிக்கோலால் கடுமையாக கழுத்து பகுதியில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ,இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்