< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
|13 Feb 2024 8:45 PM IST
கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனின் உருவம் பொறித்த கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு அம்மனின் உருவம் பொறித்த கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.