< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
திண்டுக்கல்: டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வேன் - 3 பேர் காயம்

12 Aug 2022 11:02 AM IST
திண்டுக்கல் அருகே டயர் வெடித்து சரக்கு வேன் நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பூர் பிரிவு அருகே பெங்களூருவில் இருந்து பேக்கரியில் கெட்டுப்போன பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள உரம் தயாரிக்கும் நிலையத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்த போது சரக்கு வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் நடுரோட்டில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சரக்கு வேனில் வந்த டிரைவர் அப்பு (22), சூர்யா (28), பால்ராஜ் (41) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.