திண்டுக்கல்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி
|கோபால்பட்டி அருகே கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி ஒருவர் படுகாயம்.
கோபால்பட்டி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்தானம் (வயது47), ராஜ்குமார் (35), பிரகாஷ் (30) இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாபுரத்தில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிப்பதற்காக வந்தனர்.
அவர்கள் நத்தம்-திண்டுக்கல் சாலையில் எஸ்.கொடை பிரிவு அருகே வந்தபோது கோபால்பட்டியிலிருந்து நத்தம் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சந்தானம் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த பிரகாஷ் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் கார் டிரைவர் வி.எஸ்.கே.குரும்பபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(40) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.