< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: வேன் மீது டிராக்டர் மோதி விபத்து - 14 பேர் படுகாயம்
மாநில செய்திகள்

திண்டுக்கல்: வேன் மீது டிராக்டர் மோதி விபத்து - 14 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
12 Jun 2022 6:47 PM IST

திண்டுக்கல் அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்(39). இவர் வத்தலக்குண்டு அருகேயுள்ள கட்டகாமன்பட்டியில் உள்ள தனியார் மில்லுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வேன் டிரைவராக உள்ளார்.

இவர் தினமும் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மில்வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று வருகின்றார்.

சதீஸ் நேற்று வழக்கம் போல் அய்யம்பாளையத்தில் மில்வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மணிகண்டன்(37) என்பவர் ஓட்டிவந்த டிராக்டர் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் சதீஸ்(39), மில்வேலைக்குச் சென்ற கங்கா(30), மாரிமுத்து(25), தனம்(38), விஜயலட்சுமி(32) பேச்சியம்மாள்(50),சித்ரா(29), சுதா(30) முனியம்மாள்(22), பாண்டியராஜ்(60), திலகவதி(25), ஜேசுதாஸ்(30), சுமதி(30) மற்றும் டிராக்டர் டிரைவர் மணிகண்டன் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களை அப்பகுதியினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மேலும் செய்திகள்