< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
மாநில செய்திகள்

திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு

Gokul Raj B
|
3 Feb 2024 2:38 PM IST

பழனி முருகனுக்கு பூஜை செய்ய ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட திருமஞ்சன கட்டளையை செப்பேடு எடுத்துரைக்கிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டினை திருமஞ்சன பண்டாரம் சண்முகம் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார். இதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்.

சுமார் 3 கிலோ எடை, 49 சென்டி மீட்டர் உயரம், 30 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இச்செப்பேடு, பழனி முருகனுக்கு பூஜை செய்ய வேண்டி செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த திருமஞ்சன கட்டளையை எடுத்துரைக்கிறது.

இது 1363-ம் ஆண்டு தை மாதம் 25-ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது என்றும், இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்பமிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், முருகன், செவ்வந்தி பண்டாரம், செக்கு சின்னம் ஆகியவை வரையப்பட்டு முருகனின் புகழ் 5 பாடல்களாக பாடப்பட்டுள்ளன.



மேலும் செய்திகள்