< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்; தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்; தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 Sept 2023 1:00 AM IST

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சபாபதி, பட்டியல் அணி துணை தலைவர்கள் வீரஜோதி, செந்தாமரை, ஒ.பி.சி. அணி மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆதிதிராவிடர் நலனுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியில் ரூ.10 ஆயிரத்து 466 கோடியை திருப்பி அனுப்பியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்