< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் முட்புதர்கள் அகற்றம்
|4 March 2023 1:19 AM IST
‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் முட்புதர்கள் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் நெடுஞ்சாலையில் குளவாய்ப்பட்டி அருகே குளக்கரையில் சாலையோரம் கருவேல மரங்கள், முட் செடிகள், புதர்கள் வளர்ந்து சாலை வரை நீண்டு கொண்டிருந்தது. குறிப்பாக வளைவு பகுதியில் அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்பட்டது. இதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரம் இருந்த கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்றினர். தற்போது வாகனங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்த குளக்கரையின் வளைவில் செல்கிறது.