< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: பல்லவன் குளத்தில் இருந்த கழிவுகள் அகற்றம்
|17 Sept 2022 1:07 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பல்லவன் குளத்தில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்லவன் குளம் போதிய பராமரிப்பு இன்றி இருந்தது. மேலும், பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் நீரில் கலந்து மிகவும் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை நகராட்சியின் மூலம் குளத்தில் இருந்த கழிவுகள் மற்றும் மண்மேடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.