< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: அரசு அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்
அரியலூர்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:20 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரசு அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

அரியலூர் நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதில் அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மற்றும் ஊழியர்கள் நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டாட்சியர், தாசில்தார், நகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கோர்ட்டு மற்றும் கோவில் சுவர்கள் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள சுவரொட்டிகளை அகற்றினார்கள். மேலும் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பதாகைகளும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்