< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
28 Jun 2023 7:28 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிறு,சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், ஆலங்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேட்டுபட்டி நாகமலைகோவில் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்னர் ஆபத்தான இந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மல்லாங்கிணறு.

பயணிகள் அவதி

விருதுநகர் பஸ் நிலையத்தில் இருந்து எண்ணற்ற கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் கிராம பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைந்ததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் ஒருசில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து சிறு, சிறு காயமடையும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகசாமி, சாத்தூர்.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் தண்ணீரும் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, விருதுநகர்.

மேலும் செய்திகள்