< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
31 May 2023 10:14 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் கூடல்நகர் பாலத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பையா, பெத்தானியாபுரம், மதுரை.

பயணிகள் அவதி

மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் சிறிய மழை பெய்தால் கூட கருங்காலக்குடி பஸ் நிலையம் முன்பாக தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி தாழ்வான பகுதிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிதாஸ், கருங்காலக்குடி, மதுரை.

குப்பைகள் அகற்றப்படுமா?

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மேலரத வீதியில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் குப்பைகள் குப்பைத்தொட்டியின் அருகிலும் சிதறிக்கிடக்கின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்முத்து, திருப்பரங்குன்றம், மதுரை.

தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

மதுரை மாவட்டம் குருத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில் தாழ்வான உயரத்தில் மின்வயர்கள் செல்கிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிவஞானம், குருத்தூர், மதுரை.

முட்புதர்கள் அகற்றப்படுமா?

மதுரை பூதகுடி பஞ்சாயத்து ரெங்கநாதன்புரம் மூக்கின் நகர் பகுதியில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. மேலும் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லெட்சுமணப்பெருமாள், பூதகுடி, மதுரை.

மேலும் செய்திகள்