மதுரை
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தேங்கிய நீரில் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புசெல்வம், மதுரை.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம், மீனாட்சி நகர், வில்லாபுரம், 6-வது மேற்கு குறுக்கு தெரு, நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் அச்சமாக உள்ளது. வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே, தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
காவ்யா பாலகிருஷ்ணன், வில்லாபுரம்.
குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?
மதுரை மாவட்டம் குருத்தூர் பாரதிநகர் கிராமத்தில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டியில் பராமரிப்பு இல்லாமல் சில குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தொட்டியை பராமரித்து குடிநீர் சரியாக வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
புதிய ரேஷன்கடை கட்டிடம் வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர்.இங்குள்ள ரேஷன் கடை கட்டிடம் இடிந்த நிலையில் இருப்பதால் இப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாண்டாங்குடி.
சாலைகளில் குப்பை
மதுரை கூடல்நகர் அசோக்நகர் 3-வது தெரு பகுதியில் குப்பை சாலையில் சிதறிக்கிடக்கின்றன. மேலும் இந்த பகுதி சாலையும் மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்கவும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரிட்டோ, கூடல்நகர்.
சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள சாலை மழைக்காலங்களில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியுமாக உள்ளது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகேந்திரன், கள்ளந்திரி.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாநகரின் பல பகுதி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் காயமும் அடைகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், மதுரை.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை கூடல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஆனையூர் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவிந்த்குமார், மதுரை.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கே வரும் முதியோர், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இந்தபகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டிதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் இப்பகுதி பொது மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், மதுரை.