மதுரை
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அதிகாரிகள் கவனிப்பார்களா?
மதுரை மாவட்டம் செல்லூர் அகிம்சாபுரம் முதல் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை நீர் தேங்கி உள்ளது.இந்த தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சாக்கடையை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் அங்கு கொசுக்களும் உற்பத்தி ஆகி வருகிறது. இதனால் டெங்கு பாதிப்பு வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள?
மோகன், செல்லூர்.
தெரு விளக்கு வேண்டும்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனணப்பு பாலத்தில் உள்ள மின் விளக்குகளில் பல சரி வர எரியவில்லை. இதனால் பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் இப்பாலத்தை கடக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிந்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோழவந்தான்.
மோசமான சாலை
மதுரை மாவட்டம் அவனியாபுரம் மருத்துவர் காலனியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தெருக்களில் வசிக்கும் மக்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.மேலும் இரவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தடுமாறி விழுகின்றனர். இதனால் சிறு, சிறு காயம் ஏற்படுகின்றது.எனவே சாலையை சரி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், அவனியாபுரம்.
தேங்கி நிற்குதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்ம் கழிவுநீர்
மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடைநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கிய சாக்கடை நீரால் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்புசாமி, பாலமேடு.
நடவடிக்கை தேவை
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ஆரப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பஸ்களில் சிலவற்றில் மழை காரணமாக மேற்கூரையிலிருந்து மழைநீர் பஸ்சின் உள்ளே கசிகிறது..இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதைப்பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், திருமங்கலம்.