விருதுநகர்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், ஆலங்குளம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் காத்திருக்கும் இடத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பரத்ராஜா, விருதுநகர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் நகரில் உள்ள மேலத்தெரு பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆதலால் மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அழகாபுரி அருகே உள்ள எம்.புதுக்குளம் கிராமத்தில் ேபாதுமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், எம்.புதுக்குளம்.
சேதமடைந்த சாலைதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் எத்தல் ஹார்வி சாலையிலுள்ள தனியார் பள்ளி முதல் ரெயில் நிலையம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.