மதுரை
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை அச்சுறுத்துவதுடன், வாகனங்களின் மீது குறுக்கிட்டு விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
சரவணன், வாடிப்பட்டி.
நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பேரையூர் பஸ் நிலையத்தில் இருந்து கூவலப்புரம் வழியே விருதுநகர் பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் கூவலப்புரம் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மாற்று பஸ் ஏறி பயணிக்கின்றனர். இதனால் கால விரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பஸ் கூவலப்புரம் கிராமம் வழியே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கூவலப்புரம்.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி 9-வதுவார்டு உத்தங்குடி முஸ்லிம் தெரு சந்திப்பு, கே.எம்.காலேஜ் தெரு சந்திப்பு பகுதியில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியினர் இரவு வேளையில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், மதுரை.
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை ஆண்டாள்புரம் வசந்தநகர் பகுதியில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
குமாரத்தேவன், மதுரை.
நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாவட்டம் செல்லூர் மார்க்கெட் அருகில் அய்யனார் கோவில் பிரதான சாலையில் ஒரு வாரகாலமாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
மோகன், செல்லூர்.