< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
14 Sept 2023 12:15 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தீர்வு கிடைக்குமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பத்திரதரவை கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகபகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்தி, பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதனால் அலுவலகம் வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலப்பு, சந்து ராசு கோபி, பத்திரதரவை,

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் திருவாடானை ஊராட்சி அழகுமடை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

ஆறுமுகம், திருவாடானை.

கொசு தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் கொசுக்களின் தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த கொசுக்களின் தொல்லையால் பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

காதர் மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் நகரில் தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீர் சுத்தமானதா என நகராட்சி அலுவலர்கள் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதில்லை. தரமற்ற குடிநீரால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தெருவிளக்கு வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் இருந்து நாகநாத சமுத்திரம் செல்லும் சாலையில் மின்விளக்கு இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவ்வழியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வண்ணாங்குண்டு.

Related Tags :
மேலும் செய்திகள்