< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
10 Sep 2023 7:15 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் உள்ள ஒரு சில கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், சிங்கம்புணரி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி,

கூடுதல் பஸ்கள் தேவை

சிவகங்கை மாவட்டம் பாகனேரி மற்றும் கல்லல் சுற்றுப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குமரன், பாகனேரி,

தெருநாய்கள் தொல்லை தீருமா?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, தேவகோட்டை,

தெருவிளக்குகள் வேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் தொண்டி செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, சிவகங்கை,

மேலும் செய்திகள்