< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
27 Aug 2023 6:58 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி நீர்த்தேக்கம் அணைக்கட்டின் தடுப்புச்சுவர் முழுவதிலும் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் தடுப்புச்சுவரின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இங்குள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

வியாபாரிகள் அவதி

விருதுநகர் உழவர் சந்தைக்கு அருகில் உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜாகனி, விருதுநகர்.

மண் குவியல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புதிய பாலம் முதல் வி.சி. புரம் நான்குவழிச் சாலை சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது.. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே மண் குவியல்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சாத்தூர்.

நடவடிக்கை தேவைதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் எஸ். ராமச்சந்திரபுரம் ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மெயின் பஜார் செல்லும் வழியில் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.

மேலும் செய்திகள்