< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
10 July 2023 3:49 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தொல்லை தரும் நாய்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துவேல், வத்திராயிருப்பு.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் இலந்தைக்குளம் கிராமம் வடக்கு தெருவில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் நடக்க, பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், இலந்தைக்குளம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன்நகர் 12-வது வார்டு முதல் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருத்தங்கல்.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் போதுமான பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், காரியாபட்டி.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் பேரூராட்சியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமுல்ராஜ், மம்சாபுரம்.

Related Tags :
மேலும் செய்திகள்