< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
8 May 2023 1:58 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொதுமக்கள் அச்சம்

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருக்களில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் தெருக்களில் அடிக்கடி சண்டை போடுவதால்.அந்த வழியிலேயே பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிகை எடுக்க வேண்டும்.

கருப்பையா, பெத்தானியாபுரம்.

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாநகராட்சி 39-வது வார்டு யாகப்பா நகர் எம்.ஜி.ஆர். தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சாலை போடப்படவில்லை. தற்போது பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன், மதுரை.

தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சி 70-வது வார்டு ராஜா சர் முத்தையா நகர், பைபாஸ் ரோடு மத்திய கிடங்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள தாமஸ் தெருவில் மழை நீரும் சாக்கடை கழிவு நீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள மெயின் ரோட்டில் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளங்களினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், டி.கல்லுப்பட்டி.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் பேரையூர் காமராஜர் தெரு, சிலைமலைப்பட்டி ரோடு ஆகிய பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோர்களை அதிகமாக துரத்துகிறது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரபிக், பேரையூர்,

Related Tags :
மேலும் செய்திகள்