மதுரை
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, சோழவந்தான்.
இருள் சூழ்ந்த பகுதி
மதுரை மாவட்டம் செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில் மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் நுழைவில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், மீனாம்பாள்புரம்.
கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்
திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடிவேல்கரை கிராமத்தில் அமைந்துள்ள கண்மாயில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகராஜ், தனக்கன்குளம்,
சாலையில் செல்லும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சி 66-வது வார்டு நடராஜ் நகர் எடிசன் தெருவில் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
நடவடிக்கை தேவை
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிப்பறை செயல்பாடு இன்றி உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பொன்னமங்கலம்.