< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
16 April 2023 8:54 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிப்படை வசதிகள் தேவை

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 88-வது வார்டில் உள்ள கங்கா நகர், மாருதி நகரில் குடிநீர், பாதாள சாக்கடை, தார்ச்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

ஆபத்தான பள்ளம்

மதுரை தெப்பக்குளம் மெயின் சாலையில் ஒரு உணவகத்தின் எதிரே குடிநீர் செல்லும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன. மேலும் இரவு நேரத்தில் வாகன விபத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் பகுதியில் சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாஷ், முனிச்சாலை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, திருமங்கலம்.

விபத்து அபாயம்

மதுரை கே.புதூர் ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மின்வாரிய அலுவலகங்கள் வழியாக செல்லும் மெயின் ரோட்டில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், மதுரை.

Related Tags :
மேலும் செய்திகள்