< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
23 March 2023 3:28 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்து அபாயம்

மதுரை அழகர்கோவில் ரோட்டில் இருந்து மூன்றுமாவடி முதல் அய்யர்பங்களா வரை உள்ள சாலையின் இரு பக்கங்களிலும் பள்ளம் உள்ளன. இதனால் அடிக்கடி இந்த ரோட்டில் விபத்துக்கள் நடக்கிறது எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், சர்வேயர்காலனி, மதுரை.

கால்நடைகள் தொல்லை

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர். நிலையம். மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி சாலைகளில் நாய்கள், கால்நடைகள் அதிகம் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

பாண்டி, மதுரை.

புதிய தார்ச்சாலை வேண்டும்

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட செல்லூர் குலமங்கலம் சாலை இருபுறமும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

சந்தனகுமார், செல்லூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்ல இரவு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்படுகின்றன.. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பசாமி, மதுரை.

புதிய ரேஷன் கடை வேண்டும்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி.

Related Tags :
மேலும் செய்திகள்