< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் இருந்து இரணியன் வலசை கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தேர்போகி.

கொசு தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

பஸ் வசதி தேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழி மூன்று மாவட்ட எல்லையில் உள்ளது. இவ்வூரில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பழனி போன்ற வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இவ்வூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள சாயல்குடிக்கு சென்று பஸ் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முனியசாமி, பெருநாழி.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது ரபீக், கீழக்கரை.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி ஊராட்சியில் கமுதி செல்லும் சாலையில் கழிப்பறை மற்றும் குளியலறை தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

முத்துவேல், கமுதி.

Related Tags :
மேலும் செய்திகள்