மதுரை
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
மதுரை சேசு மஹால் சாலையில் இருந்து சுந்தரம் பள்ளி திரும்பும் வழியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், மதுரை.
ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் தேவை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை இடிக்கப்பட்டு 5 ஆண்டு ஆகிவிட்டது. இப்பொழுது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமயகருப்பு, ஆனைக்குளம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்ட மைய நூலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என ஏறாளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு உள்ள கழிப்பறையை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
தார்ச்சாலை வேண்டும்
மதுரை மாவட்டம் புது விளாங்குடி பொற்றாமரை நகரில் சுமார் 200 வீடுகள் உள்ள நிலையில் பொற்றாமரை நகருக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் வருவதில்லை. இதனால் அவசர தேவை மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கம், பொற்றாமரை நகர்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்து, செட்டியபட்டி பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிருஷ்ணபாண்டி, செட்டியபட்டி