< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
25 Dec 2022 7:28 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கொசு தொல்லையால் அவதி

சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி கொசுக்களின் தொல்லையால் மக்கள் அவதிப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை நகர் மற்றும் சுற்றுப்புற சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் முக்கியமான பணிகளுக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், சிவகங்கை.

நாய்கள் தொல்லை

காரைக்குடியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராமகிருஷ்ணன், காரைக்குடி.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆழ்துளைக் கிணறு உள்ளது. அது பாதையை மறைத்து அமைந்துள்ளது. இதனால் வயதானவர்கள் உள்ளே வரமுடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், வைகை வடகரை.

சேதமடைந்த பாலம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 23-வது வார்டு காந்தி ரோடு மார்க்கெட் மேல தெரு சந்திப்பில் உள்ள பாலத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்கிறார்கள். எனவே சேதமடைந்த பாலத்தை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜீஸ்கான், தேவகோட்டை

Related Tags :
மேலும் செய்திகள்