< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
18 Sep 2022 6:34 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையை சீரமைப்பார்களா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சேத்தூர் சாலை பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி அங்கு விபத்து நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியப்பன், தளவாய்புரம்.

வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்ராஜ், முகவூர்.

தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 37-வது வார்டு முஸ்லிம் சர்க்கரை வாவா தெரு பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, சிவகாசி.

கண்மாய் தூர்வாரப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் கண்மாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முகவூர்,

வேகத்தடை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கங்கா குளம் ரோட்டில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் எஸ்.என். புரம் உள்ளது. இங்கு 2 இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பூபதி, சிவகாசி.

மோசமான சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் -சேத்தூர் சாலையில் பல இடங்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசைத்தம்பி, முகவூர்,

Related Tags :
மேலும் செய்திகள்