< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
5 Sep 2022 6:20 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கிய கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் முன்னர் தேங்கிய கழிவுநீரை அகற்றி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரவிந்த், ஆத்தங்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கலாபட்டியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

கருப்பையா, திருக்கலாபட்டி.

இருவழிச்சாலை வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுரை-பொன்னமராவதி சாலையில் பிரான்மலை அமைந்துள்ளது. அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த சாலை ஒருவழிப்பாதையாகவே உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். எனவே இந்த சாலையை இருவழி பாதையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாபர் அலி, கிருங்காக்கோட்டை.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜார் மற்றும் கல்லுக்கட்டி கிழக்கு வடக்கு பகுதி சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஷீத், காரைக்குடி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காட்டில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோயை பரப்பி வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

தீரன், பீர்க்கலைக்காடு.

Related Tags :
மேலும் செய்திகள்