< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
2 Sep 2022 7:44 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் தொடர் மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் அழுகிய காய்கறிகளை சிலர் சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, மதுரை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை சிம்மக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகபடியான வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேம், மதுரை.

குண்டும் குழியுமான சாலை

மதுரை குலமங்கலம் சாலை இருபுறமும் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சிலர் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுரை தெற்குவெளிவீதி கிரைம்பிராஞ்ச் எதிரில் உள்ள குப்புப்பிள்ளை தோப்பு 2-வது சந்து, மதீனா பள்ளிவாசல் அருகில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதா சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

இமாமுதீன், மதுரை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கண்மாய்ப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பு உள்ளது.. இதனால் இப்பகுதிக்கு வரவேண்டிய புதிய சாலை உள்ளிட்ட பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன், மதுரை.

Related Tags :
மேலும் செய்திகள்