< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
26 Aug 2022 5:42 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை அமைப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை கிராமத்தின் பின்புறத்தில் கொம்பூதி கிராமம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மாயாகுளம்.

ஆபத்தான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பெருந்தரனை கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே ஆபத்தான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, முதுகுளத்தூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமிர்த பாண்டியன், சாயல்குடி.

குண்டும்-குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சாலை குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்க முடியாமல் இருசக்கர வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களையும் பழுதாகின்றது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கமுதி.

சாலையில் ஓடும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் சாக்கடையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

Related Tags :
மேலும் செய்திகள்